சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ளது விக்ரம் படம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற மாஸ் கலந்த ஹிட் படங்களை கொடுத்து வந்தவர்.
தற்போது டாப் நடிகர் கமலஹாசனை வைத்து உருவான விக்ரம் படம் எப்படி இருக்கும் என்பதே ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த படத்தில் கமலஹாசனுடன் இணைந்து முக்கிய நடிகர்களான விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா மற்றும் நரேன் போன்ற பலரும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி..
உள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. பான் இந்திய அளவில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், நீண்ட இடைவேளைக்கு பிறகு கமலஹாசன் குரலில் வெளிவந்த பத்தல பத்தல பாடல் போன்றவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆகியதை அடுத்து படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி.
உலக அளவில் கோலாகலமாக வெளியாக உள்ளது. ஒருபக்கம் படத்திற்கான பிரமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகையில் மறுபக்கம் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படம் குறித்தும் கமல் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை பேட்டியில் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அண்மையில் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். அப்போது ரஜினிகாந்த் விக்ரம் படத்திற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை லோகேஷ் கனகராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.
Thank you @ikamalhaasan Sir! @rajinikanth Sir! What a friendship! inspiring Love you Sir's❤️❤️❤️ pic.twitter.com/l61EuttG89
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 29, 2022