“வலிமை” படத்தை விஜய் ரசிகர்களும் கொண்டாடுவார்கள் – காரணம் இதுதானா.? போனிகபூர் அசத்தல்.!

valimai
valimai

சினிமா உலகில் தனக்கென ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சைலண்டாக வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். அத்தகைய ரசிகர்களுக்காக வருடத்திற்கு ஒரு படத்தையாவது சிறப்பான முறையில் கொடுத்து வருகிறார் ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அஜித்தின் திரைப்படங்கள் வெளிவராது ஆரம்பத்தில் சற்று ரசிகர்களை வருத்தமடையச் செய்தாலும்..

அவர்களை சந்தோஷம் அடைய செய்ய பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளது இதனால் டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் தற்போது அலை மோதுகின்றனர். வலிமை திரைப்படம் தமிழில் தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகிறது.

இதுவே அஜித்தின் கேரியரில் முதல்முறையாக நடப்பதால் மிகப்பெரிய அளவிலான திரையரங்குகளை கைப்பற்றி உள்ளது மேலும் முதல், இரண்டு நாட்களில் மட்டுமே வலிமை திரைப்படம் சொல்லப்போனால் 50 கோடிக்கு மேல் வசூல் செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் புரமோஷன் வேலைகளையும் சைலண்டாக செய்து வருகிறது படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகர்கள் போனிகபூர் மறுபக்கம் இயக்குனர் வினோத் போன்றவர்களும் பேட்டிகளின் மூலம் படத்தை புரமோஷன் செய்கின்றனர் மறுபக்கம் ரசிகர்கள் திரையரங்கு முன்பு மிகப்பெரிய பேனர்களையும் வைத்து அசத்துகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார் அதில் அவர் கூறியது : தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வரும் அஜீத் விஜய் இருவருமே பெருந்தன்மையை கொண்டவர்களாக இருக்கின்றனர் காரணம் அஜித்தின் படம் வெளிவரும் பொழுது..

விஜய் ரசிகர்கள் கொண்டாடுவதும் விஜய் படம் வெளிவரும் போது அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் இதனால் அவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இது ஒரு நல்ல விஷயம் கூட என கூறியிருந்தார்.