Actor vijay fans attitude: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். சமீபகாலமாக சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மிகப் பெரிய வெற்றிப் படமாக மாற்றி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளிவந்த பிகில் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தில் ஹீரோயினாக மாளவிகா மேனன் இவரைத் தொடர்ந்து ஆண்ட்ரியா, அருண் தாஸ், சந்தானு மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் இசை விழா கோலாகலமாக நடந்த நிலையில் இதனை அடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் படம் எப்போது ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ட்ரைலர் மற்றும் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் படம் தள்ளிப்போய் இருந்தாலும், ட்ரெய்லர் ஏன் இன்னும் வெளியிடவில்லை என விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அவர்களின் அடுத்த படம் பற்றிய பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட அதிலிருந்து விஜய் ரசிகர்கள் கேள்விகள் மூலம் இயக்குனரை போட்டுத்தாக்கி உள்ளனர். நெட்டிசன் ஒருவர் வடிவேலு கையில் கத்தி வைத்திருக்கும் புகைப்படத்தை காட்டி மாஸ்டர் டிரைலர் அப்டேட் கொடுக்க முடியுமா முடியாதா என மிரட்டலாக கேட்டுள்ளார். இன்னும் சிலர் கெஞ்சியும் மிரட்டியும் சிலர் திட்டியும் கேட்டு பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை நீங்களே பாருங்கள்.
Congrats @iam_arjundas trailer looks kickass? https://t.co/DjVeUnZudA
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 14, 2020
Congrats @iam_arjundas trailer looks kickass? https://t.co/DjVeUnZudA
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 14, 2020