நேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி விட்டது கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் ஒரு சில காரணம் குறித்து நேற்று போகி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது.
மேலும் வெளிவந்த நாளிலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தையும் பெற்றுள்ளது.
மேலும் மாஸ்டர் திரைப்படத்தை பார்ப்பதற்கு விஜய் ரசிகர்கள் அதிகாலையில் இருந்தே திரையரங்களில் ஆர்ப்பாட்டம் செய்து வந்தார்கள் என்பது பலருக்கும் தெரியும் அந்த வகையில் நாமக்கல் சேலம் சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் அதிகாலையில் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படத்தை பார்ப்பதற்கு நின்றிருந்தனர்.
திரையரங்கு முன்பு அதிக ரசிகர்கள் நின்றதால் அதில் பல ரசிகர்கள் சாலையின் நடுவே திரண்டு வந்து டான்ஸ் ஆடி உள்ளார்களாம்.ஆனால் அதில் ஒரு சில ரசிகர்கள் மது அருந்திவிட்டு டான்ஸ் ஆடி ஆர்ப்பாட்டம் செய்ததால் அங்கு இருந்த பாதுகாப்பு காவல்துறையினர் அவர்களை லேசாக தடியால் அடித்து அங்கிருந்து அவர்களை விரட்டியதாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.