Jailer movie: சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இதனால் விஜய் ரசிகர்கள் வேண்டுமென்றே ஜெயிலர் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை தந்து வருவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார், அண்ணாத்த திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனவே வெற்றி திரைப்படத்தினை தந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினி இருந்து வந்த நிலையில் இவருடைய நடிப்பில் இன்று ஜெயிலர் திரைப்படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து பாசிட்டி விமர்சனங்களை பெற்று வருகிறது.
எனவே இந்த படத்தின் முதல் காட்சி தமிழகத்தில் காலை 9 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில் ரஜினியின் ரசிகர்கள் வெடி வெடித்து தாரை தப்பட்டையோடு இனிப்புகள் வழங்கி திருவிழா போல் கொண்டாடினார்கள். மேலும் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனத்துடன் மாபெரும் வெற்றியை பெரும் என்று தெரியவந்துள்ளது.
அப்படி ஜெயிலர் படத்தில் இடம்பெற்று இருக்கும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது இந்த பாடல்களை பாடியவர் அனிருத் தான். விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் தோல்வினை சந்தித்த இயக்குனர் நெல்சன் தற்பொழுது ஜெயிலர் படத்தின் மூலம் பாசிட்டி விமர்சனங்களை பெற்று வெற்றியினை அடைந்துள்ளார்.
இவ்வாறு காலை முதல் காட்சியிலிருந்து தற்போது வரையிலும் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் திரையரங்கிற்கு சென்ற தலைவரின் படத்தை பார்த்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் விஜய் சூப்பர் ஸ்டார் என்ற விவகாரம் ஏற்கனவே பேசும் பொருளாக இருந்து வருகிறது.
ஆனால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே எனக் கூறி வருபவர்களும் இருப்பதனால் இருதரப்பு ரசிகர்களும் மாறி மாறி தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இவ்வாறு இதனை மனதில் வைத்துக்கொண்டு விஜய்யின் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் முதல் பாதி பரவாயில்லை இரண்டாவது பாதி மிகவும் மோசமாக உள்ளது என்று வேண்டுமென்றே நெகடிவ் விமர்சனங்களை பரப்பி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இவ்வாறு விஜய் ரசிகர்களின் தவறான இந்த விமர்சனங்களால் ஜெயிலர் படத்தின் வசூல் மற்றும் காட்சிகள் பாதிக்கப்படும் என்ற பயமும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தலைவர் முத்துவேல் பாண்டியன் தன்னுடைய தரமான வெற்றியை ஜெயிலர் படத்தின் மூலம் கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.