தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் தளபதி விஜய். சமீபகாலமாக தளபதி விஜய் அவர்கள் நடிக்கும் படங்கள் மாபெரும் வசூல் வேட்டை நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் சாதனை படைத்தது மட்டுமில்லாமல் சின்னத்திரையில் டிஆர்பி எனும் சாதனையை படைத்து வந்துள்ளது.
தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா உலகில் மாபெரும் ஹிட்டடித்த திரைப்படங்களை சின்னத்தரையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது அந்த வகையில் விஜய்யின் பல படங்கள் சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்டு தனது டிஆர்பி ரேட்டை ஏற்றுக் கொண்டது. அந்த வகையில் தளபதி நடித்த பிகில் மற்றும் தெறி ஆகிய படங்கள் சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்டு டிஆர்பி ரேட்டை மேலும் ஏற்றிக்கொண்டது.
ஒரு பக்கம் இருந்தாலும் அதிக அளவில் தளபதி விஜயின் படங்களை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர் அந்தவகையில் இந்த வாரம் பிகில் திரைப்படம் சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட உள்ளது.
இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் விஜய் படமே சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் ஊர் முழுக்க போஸ்டரை ஒட்டி சன்டிவிக்கு கோரிக்கை ஒன்று வைத்துள்ளனர்.
அந்த போஸ்டரில் போனவாரம் தெறி போட்டீங்க இந்த வாரம் பிகில் போடுறீங்க சந்தோஷம் அடுத்த வாரம் அது மற்ற நடிகரின் படத்தை போடுங்க பா.. தளபதி சொன்ன மாதிரி எல்லோரும் நல்லா இருக்கணும் இந்த போஸ்டரை மதுரை மாநகர் வடக்கு மாவட்ட மாணவரணி ஊர் முழுக்க ஒட்டி உள்ளனர் இந்த போஸ்டரை பற்றிய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவிவருகிறது இதோ வந்த புகைப்படம்.
தளபதி ரசிகர்களுக்கு குசும்பு பாத்தியலா ??? மற்ற நடிகர் படமும் போடுங்கையா #Master @actorvijay #Bigil pic.twitter.com/6odK5MNpIz
— வில்லன் ??? (@suresh_mari) August 1, 2020