Leo Movie: லியோ டிக்கெட் விலை குறித்து விஜய் ரசிகர் ஒருவர் பேசிய ஆடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி இருக்கும் விஜய்யின் லியோ படத்திற்கு தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளது.
இவ்வாறு ஏராளமான வதந்திகளுக்கு சமீப பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்திருந்த நிலையில் தற்பொழுது மேலும் டிக்கெட் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்து.
ஆனால் சிறப்புக் காட்சி ரிலீஸ் ஆவதற்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் 18ஆம் தேதி மதியம் மற்றும் இரவே லியோ படத்தினை ரிலீஸ் செய்வதாக படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. லியோ படத்திலிருந்து வெளியான போஸ்டர்கள், பாடல்கள், ட்ரைலர் என அனைத்துமே விமர்சனம் செய்யப்பட்டு வருவதனால் படக்குழு பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது.
அப்படி சமீபத்தில் லியோ ட்ரெய்லர் வெளியான நிலையில் அதில் விஜய் சில ஆபாச வார்த்தைகள் பேசி இருப்பதனால் அந்த வார்த்தைகளை நீக்க கோரி போலீசாரில் புகார் அளிக்கப்பட்டது. இவ்வாறு இந்த பிரச்சினையே இதுவரையிலும் முடியாமல் இருந்து வரும் நிலையில் தற்பொழுது லியோ படத்தின் டிக்கெட் விலை 1500 ரூபாய் என கூறப்படுகிறது.
அதாவது பூந்தமல்லி எஸ் பி சினிமாவில் லியோ திரைப்படம் சிறப்பு காட்சிக்கு 1500 ரூபாய் டிக்கெட் விற்பனை செய்வதாக விஜய் ரசிகர் ஒருவர் பேசிய ஆடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மாலை வெளியாகும் சிறப்புக் காட்சிக்கு 1500 ரூபாயும், இரவு காட்சிக்கு 1200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளதாம். மேலும் 19ஆம் தேதி அன்று ரூபாய் 500க்கு விற்கப்பட இருப்பதாக ரசிகர் ஒருவர் ஆடியோவை வெளியிட்டுள்ளார். எனவே அரசு நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் விலையை விட 10 மடங்கு அதிகமாக டிக்கெட் விலை கூறப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளார்.