சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தாலும் அவ்வபோது தோல்வி படங்கள் கொடுக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் ஒரு சில தடவை நல்ல கதைகளையும் தவறவிடுவது வழக்கம் அப்படி ஒரு ஹீரோ தவறவிட்ட கதையை மற்றொருவர் நடித்து வெற்றி பெறுவது சகஜமாக நடக்கிறது.
அது யாராலும் தடுக்கவும் முடியாது அப்படி விஜய்க்கு வந்த வாய்ப்பை அஜித் தட்டிப்பறித்துள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, அப்பாஸ், அஜித், ஐஸ்வர்யா ராய், தபு போன்றவர்கள் நடிப்பில் உருவான திரைப்படம் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”..
இந்த திரைப்படம் உருவானது குறித்து சமீபத்தில் கலைபுலி தாணு அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். அவர் சொன்னது.. இயக்குனர் ராஜீவ் மேனன் நடிகை ஐஸ்வர்யாராயை சந்தித்து கதையை சொல்லி ஓகே வாங்கிய பிறகு அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க ஹீரோவை தேடினார்.
முதலில் நடிகர் பிரசாந்தை தான் தேர்வு செய்தார் ஏனென்றால் ஜீன்ஸ் திரைப்படத்தில் பிரசாந்தும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து நடித்தனர் இதனால் இந்த படத்தில் இருவரும் மீண்டும் நடித்தால் இந்த படத்தின் வியாபாரம் அதிகரிக்கும் என கணக்கு போட்டனர் ஆனால் பிரசாந்த் நடிக்க மறுத்துவிட்டார் அடுத்ததாக விஜய் இல்லத்திற்கு சென்று அவரிடம் கதை கூறியுள்ளார்.
அவருக்கு கதை பிடித்திருந்தாலும் மற்ற படங்களில் கமிட்டாகி இருந்ததால் நடிக்க முடியாமல் போனதாம் பிறகு அஜித் அந்த படத்திற்கு செட் ஆனார் என கூறப்படுகிறது. படம் வெளிவந்து அதிரிபதிரி ஹிட் அடித்ததோடு மட்டுமல்லாமல் நடிகர் அஜித்திற்கு ஒரு நல்ல படமாகவும் அமைந்தது. இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.