இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தற்பொழுது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தினைப் பற்றிய தகவல்கள் ஏதாவது ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது விஜய் செய்த செயலால் லோகேஷ் கனகராஜ் அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது காஷ்மீரில் முழு வீச்சவுடன் நடைபெற்று வரும் நிலையில் கடுகுளிர் என்று கூட பார்க்காமல் அனைவரும் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தினமும் காலை 9 மணிக்கு படப்பிடிப்பு தொடங்குமாம் அந்த சமயத்தில் குளிர் அதிகமாக இருக்கும்.
எனவே ஒரு நாள் படப்பிடிப்புக்கு அனைவரும் ரெடியாகி கொண்டிருந்தனர் அப்பொழுது திடீரென்று விஜய் அங்கு இல்லை அவரைத் தேடிப் பார்க்கும் பொழுது கூட அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு விஜயின் உதவியாளரிடம் கேட்ட பொழுது அவர் காலையில் 8:00 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விட்டதாக சொன்னவுடன் லோகேஷ் கனகராஜ் பயந்துவிட்டாராம்.
எனவே உடனே படப்பிடிப்பு தளத்திற்கு லோகேஷ் கனகராஜ் கிளம்ப அங்கு ஜெர்கின் போட்டுக் கொண்டு விஜய் அமர்ந்து இருந்தாராம். அவரிடம் ஏன் இவ்வளவு சீக்கிரமாக வந்தீர்கள் என்று கேட்டதற்கு எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை நீங்க எப்போ வேணும்னாலும் வந்து ஆரம்பிங்க என்று சிரித்துக் கொண்டே லோகேஷ் கனகராஜிடம் கூறினாராம்.
இவ்வாறு கடும் குளிரில் விஜய் சீக்கிரமாக கடைப்பிடிப்பு தளத்திற்கு வந்தது லோகேஷ் கனகராஜிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. லியோ திரைப்படத்தில் திரிஷா இணைந்துள்ள நிலையில் மேலும் இந்த படம் ஆக்ஷன் திரில்லர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து இந்த வருட ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.