சின்னத்திரையில் தொலைக்காட்சி சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் துணை இயக்குனராக பணியாற்றிய பின் ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் படங்களை இயக்கும் அளவிற்கு முன்னேறி உள்ளவர் நெல்சன் திலீப்குமார். முதன் முதலில் இவர் சிம்புவை வைத்து 2010 ஆம் ஆண்டு வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை இயக்கினார் ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் பாதியிலேயே நின்று போக..
2018 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் யோகி பாபு வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கினார் இந்த படம் எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து நெல்சனின் சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்டியது அதாவது டாப் நடிகர்களுக்கு கதை சொல்லும் அளவுக்கு முன்னேறினார்.
அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் படத்தின் கதையை சொல்ல அவருக்கு ரொம்ப பிடித்துப் போகவே உடனடியாகவே எடுக்கப்பட்ட இந்தப் படம் காமெடி மற்றும் ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகியது. படம் சிறப்பாக இருந்ததால் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை நடத்தியது அதன்பின் இப்பொழுது விஜய்யை வைத்து பீஸ்ட் என்னும் படத்தை எடுத்துள்ளார்.
இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒருவழியாக வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகிறது இதனை முன்னிட்டு பல்வேறு அப்டேட்களை கொடுத்து வருவதோடு மட்டுமல்லாமல் நெல்சன் இந்த படம் குறித்தும், விஜய் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து வருகிறார். அண்மையில் விஜய் இந்த படத்தில் ரா ஏஜெண்டாக நடிக்கிறார் என கூறினார். இப்பொழுதும் பல்வேறு சிறப்பான தகவல்களை கொடுத்து வருகிறார் அப்படி அவர் சொன்னது விஜய் சாரோட ஒரு ஷாப்பிங் போனப்ப கூட ரொம்ப சிம்பிளா தான் பொருட்கள் வாங்கினார்.
100 ரூபாய் பிரியாணி ஆக இருந்தால் கூட அதையும் சந்தோஷமாக சாப்பிடுவார் அப்படி ஒரு சிம்பிள் லைப்ஸ்டைல் அவருடையது. அப்படி ஒரு நாள் ராத்திரி அவரோடு சாப்பிட உட்கார்ந்தோம் விஜய் சார் பிரியாணியை சாப்பிட்டு கொண்டு இருந்தார் நாங்கள் பார்த்த உடனேயே வெளியே போய் நாங்க வேற ஏதாவது சாப்பாடு வாங்கிட்டு வர வேணாம்னு சொன்னப்ப இருக்கிறது போதும் என கூறி அந்த நூறு ரூபாய் பிரியாணியை சாப்பிட்டார்.