தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக ஓடிக் கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இதனை தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் உடன் கைகோர்த்து “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
முதல் கட்ட சூட்டிங் சென்னையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதை தொடர்ந்து தனி விமானத்தின் மூலம் படக்குழு காஷ்மீருக்கு சென்றது அங்கு கடும் குளிர் என்று கூட பார்க்காமல் படப்பிடிப்பை விறுவிறுப்பாக எடுத்து வருகிறது. லியோ படத்தில் விஜயுடன் சேர்ந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன்..
சஞ்சய் தத், பிரியா ஆனந்த், திரிஷா, பிக்பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் லலித் குமார் தான் தயாரித்து வருகிறார் என பலரும் சொல்லி வருகின்றனர் இந்த நிலையில் லியோ திரைப்படத்தை லலித் குமார் தயாரிக்கவில்லை என ஒரே போடாக போட்டு உள்ளார் பிரபலம்.
அவர் சொன்னது.. லியோ படத்திற்கு ப்ரொடக்ஷன் வேலையை பார்ப்பது லலித் குமார் கிடையாது தளபதி விஜய் தான் என்றும் இதனால் லியோ திரைப்படத்தில் விஜய் நடிக்க சம்பளம் வாங்கவில்லை அவருடைய படம் தான் இது.. படத்தின் location தொடங்கி அனைத்து வேலைகளையும் விஜய் தான் தேர்வு செய்கிறார்.
விஜயின் நிழல்லாக இருக்கும் ஜெகதீஷ் இறங்கி வேலை பார்க்கிறார். லியோ பட இயக்குனர் லோகேஷ் உடன் ஜெகதீஷ் தான் சுற்றி சுற்றி அனைத்து வேலைகளும் பார்த்து வருவதாக பிரபல kodanki abraham கூறி இருக்கிறார் இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.