Vijay : திரை உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நம்பர் நடத்தை பிடிக்க வேண்டும் என்பது ஆசைதான் ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள்ளே வைத்து கை நகர்த்தி வருவார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் பிரச்சனை தற்போது பெரிதாக வெடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.
வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழாவில் சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என கூறி பேசினார் அதற்கு விஜய் மறுப்பு தெரிவிக்காமல் இருந்ததை தொடர்ந்து இந்த செய்தி பெரிய அளவில் பரவியது இதற்கு பதிலடி கொடுக்க ரஜினி “ஜெயிலர்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ஒரு குட்டி கதை சொன்னது பூதாகரமாக வெடித்தது.
அந்த குட்டிக்கதை விஜய்யை தாக்கி தான் அவர் சொல்லி உள்ளார் கூறி விஜய் – ரஜினி ரசிகர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் சண்டை போட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஒரு இயக்குனர் விஜய் ரஜினியோடு போட்டி போட நினைக்கவே இல்லை.. விஜய் எண்ணமே வேற எனக் கூறியுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
சமீபத்தில் இயக்குனர் பிரவீன் காந்தி பேட்டி ஒன்றில் சொன்னது.. அடுத்த சூப்பர் ஸ்டார் என்றால் விஜய் என்ற நிலை வந்து விட்டதால் அஜித்தை விஜய் முந்துவிட்டார் என்று தானே அர்த்தம் விஜய் அதைத்தான் நினைக்கிறார்.
விஜய் ரஜினி உடன் போட்டி போட நினைக்கவில்லை ரஜினிக்கு அடுத்து விஜய் தான் என்ற நிலை வரவேண்டும் அப்பொழுது அஜித்தை முந்திவிடலாம் என்று தான் விஜய் நினைத்தார் அதனால் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் எனக் கூறிய பொழுது அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால் அவர் ரஜினியுடன் போட்டி போட நினைக்கவில்லை ரஜினிக்கு அடுத்து விஜய் என்று இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார் மூன்றாவது இடத்தில் இருக்க அவருக்கு விருப்பமில்லை இரண்டாவது இடத்திற்கு தான் ஆசைப்பட்டார் சிலர் இதை தவறாக புரிந்து கொண்டு பிரச்சனையை பெரிதாக்கிவிட்டனர்.