தளபதி விஜய் அண்மை காலமாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க முதல் முறையாக தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து வாரிசு திரைப்படத்தில் சூப்பராக நடித்துள்ளார். படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் விஜயுடன் கைகோர்த்து ஜெயாசுதா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. படம் வெளிவருவதற்கு இன்னும் ஒரு மாதம் இருந்தாலும் படத்தை மிகப்பெரிய ஒரு வெற்றிப் படமாக மாற்ற தொடர்ந்து ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டியுள்ளது மறுபக்கம் தளபதி விஜய் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
ஏற்கனவே பணையூரில் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு பல அறிவுரைகள் கொடுத்ததோடு சாப்பாடு போட்டு அழகு பார்த்தார் அதனைத் தொடர்ந்து தினங்களுக்கு முன்பு பனையூரில் மீண்டும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து அவர்களுக்கு ஆலோசனை கொடுத்துள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்..
போஸ்டர்களில் இடம்பெறும் வார்த்தைகள் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அரசியல் ரீதியான வார்த்தைகளை தவிர்த்து விடுங்கள் எனவும் கூறி உள்ளார். பாலாபிஷேகம், கட் அவுட் போன்றவற்றையெல்லாம் வைக்க வேண்டாம் அந்த பணத்தில் நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள் என அன்பு கட்டளை விட்டு உள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய விஜய் சோசியல் மீடியாக்களில் யாரும் எந்த ஒரு நடிகரையும் மோசமாக சித்தரிக்கவோ, ஆபாச வார்த்தைகளால் திட்டவோ பேசவோ போஸ்டர்களை போடவோ கூடாது என கேட்டுக் கொண்டார். விஜயனின் அன்பு கட்டளை தளபதி ரசிகர்கள் ஏற்று இனி அதுபோல செய்ய மாட்டார்கள் என தெரிய வருகிறது.