Vijay : தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள தளபதி விஜய் அரசியலில் இறங்குவதற்கான வேலைகளை தற்போது முன்புறமாக பார்த்து வருகிறார். சமிபத்தில் பிரேமலதா விஜயகாந்த் விஜய் எச்சரிக்கும் வகையில் பேசியிருந்தார்.
விஜயகாந்த் போல் வர நினைத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என கூறினார். இந்த நிலையில் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் இதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, வெற்றி உள்ளிட்ட படத்தில் விஜயகாந்த் தான்.
பல ஆண்டுகள் கழித்து விஜய் ஹீரோவான பிறகு செந்தூரா பாண்டி படத்தில் விஜயகாந்த் வந்து நடித்துக் கொண்திருந்தார் அதில் வரும் ஒரு காட்சியில் விஜயின் கையை தூக்கி காட்டி இருப்பார் விஜயகாந்த் இந்த சமயத்தில் உச்சத்தில் இருந்தால் பல படங்களில் வரிசையாக நடித்துக் கொண்டிருந்தார் அப்படி மிகவும் பிசியாக இருந்த போதும் கூட விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் கேட்டுக் கொண்டதால் நேரம் ஒதுக்கி கொடுத்து வந்து நடித்த அந்த படத்தில் விஜயின் அண்ணனாக நடித்திருப்பார்.
இதனை பார்த்து பல நடிகர்கள் விஜயகாந்தின் உண்மையான தம்பி தான் விஜய் என்று தவறாக நினைத்துக் கொண்டார்கள் அந்த படம் ஹிட்டானதற்கு விஜயகாந்த் தான் காரணம் என்று கூட சொல்லலாம். விஜயகாந்த் நேரமே இல்லாமல் பிஸியாக இருந்த பொழுது கூட 23 நாட்கள் நேரம் ஒதுக்கி கொடுத்து விஜய்க்காக நடித்துக் கொடுத்தார்.
இப்பொழுது விஜய் பெரிய ஹீரோவான பிறகு விஜயகாந்த் உடல்நிலை மோசமான பொழுது விஜய் நேரில் சென்று கூட பார்க்கவில்லை தற்பொழுது விஜயகாந்த் மகன் நடித்திருக்கும் படத்தில் விஜய் நடித்துக் கொடுத்து விஜயகாந்த் உதவிக்கு கைமாறு செய்யலாம் ஆனால் நினைத்தால் அது முடியும் ஆனால் விஜய் அதை செய்ய முன்வரவில்லை என்று செய்யாறு பாலு பேட்டியில் கூறி உள்ளார்.