Actor Vijay Deverakonda; தெலுங்கு முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா ரஜினியின் 6 படங்கள் தோல்வி என பேசி இருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா தற்பொழுது குஷி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் இவர் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஏராளமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.
காதல், காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக உருவாக்கியிருக்கும் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்துள்ளார். இந்த படத்தினை லெனின் விப்லவ் படத்தை இயக்க படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. மேலும் குஷி படத்தின் டிரைலர் போன்றவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் நிலையில் தமிழ், கன்னட, மலையாள மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
எனவே குஷி படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்ற முடிந்தது இதில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்ட ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இதனை அடுத்து சமீபத்தில் கோயம்புத்தூரில் குஷி பாட குழுவினர்களுடன் விஜய் தேவரகொண்டா பத்திரிகையாளர்கள் சந்தித்தார் அதில் படங்கள் தொடர் தோல்வி அடைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு விஜய் தேவரகொண்டா, ரஜினி சாருக்கே 6 படம் பிளாக் தான் ஆனது இப்போது ஜெயிலர் படம் 500 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல சிரஞ்சீவிக்கும் 6 முதல் 7 படங்கள் பிளாக் ஆனது அவர் தற்பொழுது சங்கராந்தி படம் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்தார் சில சூப்பர் ஸ்டார்கள் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டவர்கள். ரஜினி, சிரஞ்சீவி ஆகிய அவர்களின் படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும் சிலர் அவர்களை விமர்சிப்பார்கள் ஆனால் அது எனக்கு சற்று மரியாதை குறைவான விஷயமாக தோன்றும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் நான் இன்னும் ஜெயிலர் படத்தை பார்க்கவில்லை என்றும் விரைவில் பார்ப்பேன் எனவும் கூறி இருக்கிறார். சிறுவயதில் இருந்தே ரஜினியின் படங்களை பார்த்து வளர்ந்ததாகவும் அவர் கூறிய இவர் மேலும் தமிழ் சினிமாவில் இருந்து வரும் திரைப்படங்களுக்கு தெலுங்கு சினிமாவில் அதிகம் ரசிகர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழில் விஜய்-ஜோதிகா நடிப்பில் குஷி படம் வெளியான நிலையில் இது தெலுங்கிலும் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்றது இது குறித்து கேட்க தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலுமே குஷி படம் சூப்பர் ஹிட் ஆனது அந்த படங்களின் டைட்டில் என் படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது, எனக்கு பெருமை அளிக்கிறது, அந்த படங்களின் கதைகளுக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அந்த கதை வேறு இந்த கதை வேறு என விளக்கம் அளித்துள்ளார்.