தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு தமிழர் ரசிகர்களும் ஏராளம் என்று சொல்லலாம். அதன் பின்னர் பிளாக்பஸ்டர் காதல் நகைச்சுவை படமான பெல்லி சூப்புலுவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது மற்றும் சிறந்த படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருது ஆகிய இரண்டு விருதையும் பெற்றார்.
இவர் முதன் முதலில் நுவ்விலா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் விஜய் தேவரகொண்டா. அதன்பிறகு அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படத்திற்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றோர்.
இதனைத் தொடர்ந்து கீதா கோவிந்தம், நோட்டா, டியர் காம்ரேட் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் நடித்த தமிழ் திரைப்படமான நோட்டா என்ற படத்தை தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
அதன்பிறகு டியர் காம்ரேட் என்ற திரைப்படத்தை தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம்,என அனைத்து மொழிகளிலும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்கவுண்ட் ஒன்றை தொடங்கி இருக்கிறார் அதில் இவருக்கு குறைந்த நாட்களிலேயே 13 மில்லியன் பார்வையாளர்கள் பின் தொடர்கின்றனர்.
இதற்கு முன்பாகவே தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் 13 மில்லியன் பார்வையாளருக்கு மேல் கொண்ட முதல் நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார்.