மடமடன்னு வளர்ந்த விஜய்யின் மகள்.! ரசிகர்களிடம் வைரலாகும் புகைப்படம்

vijay
vijay

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவருக்கென கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது நாம் அறிந்ததே. கடந்த ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது.

இதனை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் கைகொடுத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படம் கொரோனா வைரஸ் காரணமாக தற்பொழுது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

தளபதி விஜய் அவர்கள் அவரது ரசிகையான சங்கீதாவை 1999 ஆம் ஆண்டு மணமுடித்தார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் , திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். சமிபத்தில் தளபதி பையனான ஜோசன் சஞ்சய் அவர்கள் தனது நண்பருடன் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவியது.

இதனைத் தொடர்ந்து.அவரது மகள் தற்பொழுது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்