ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றும் தளபதி விஜய் – ரகசியத்தை கண்டுபிடித்து புகைப்படத்தை வெளியிடும் நெட்டிசன்கள்.!

vijay
vijay

தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  தனது 66வது திரைப் படத்தில் தற்போது நடித்து வருகிறார் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார் மிக பிரமாண்ட பொருட்செலவில் தில் ராஜு தயாரித்து வருகிறார். தளபதி 66 படம் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் விஜயுடன் சேர்ந்து  பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் பற்றி ரசிகர்கள்  ஒன்னு விடாமல் தெரிந்து வைத்திருக்கின்றனர் அந்த அளவிற்கு விஜய் மீது ரொம்ப பாசத்துடன் இருக்கின்றனர். தளபதி 66 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது.

இதற்கிடையில் விஜய் சென்னை விமான நிலையத்தில் கருப்பு கலர் ஷர்ட்டில் மாஸ்க் மற்றும் கண்ணாடி அணிந்து வலம் வந்தார் அப்பொழுது அவர் ஹேர்ஸ்டைல் சற்று வித்தியாசமாக இருந்தது அதன் புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவியது. தொடர்ந்து விஜய் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரது ஹேர்ஸ்டைல் அதிகம் மாற்றம் தெரிகிறது இதை கண்ட நெட்டிசன்கள் பலரும் குறை சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வந்த தளபதி விஜய் கருப்பு சட்டையில் ஹேர்ஸ்டைல் சற்று வித்தியாசமாக இருந்தது. பின்பு கொஞ்சநாளில் தளபதி விஜய், பிரகாஷ் ராஜ் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் கூட அவர் வேற மாதிரியான ஹேர் ஸ்டைலில் இருந்துள்ளார் இது ஒன்று மற்றொன்று தளபதி நெல்சன் உடன் நேர்காணல் பேட்டி ஒன்றிலும் விஜய் ஹேர் ஸ்டைல் வேற மாதிரி இருக்கும். மேலும் அதில் தலையை அதிகமாக அசைக்காமல் பேசியிருப்பார்.

vijay
vijay

இதனை தொடர்ந்து பார்த்து வரும் நெட்டிசன்கள் மீண்டும் கலாய்த்து வருகின்றனர். அண்மையில் கூட தளபதி விஜய் தெலுங்கானா  முதலமைச்சர் சென்று திரும்பும் போது கூட அவரது ஹேர்ஸ்டைல் சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது இதனால் விஜய் ரசிகர்களே  உண்மையான ஹேர்ஸ் ஸ்டைல் எது என்று கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றனர்.

vijay and prakash raj
vijay and prakash raj