தமிழ் சினிமா உலகில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர் அண்மையில் உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படங்கள் எதுவும் சாதாரண வெற்றி அல்ல பிரம்மாண்ட வெற்றி தான் அதிலும் குறிப்பாக விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ஒரு புதிய உச்சத்தை தொட்டது விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக சுமார் 420 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது.
இதனால் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான உலகநாயகன் கமலஹாசன் செம சந்தோஷமானார் அதேசமயம் லோகேஷுக்கும் நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். கமலும் இந்தியன் 2, சபாஷ் நாயுடு, தேவர்மகன் 2 போன்ற படங்களில் அடுத்தடுத்து நடிப்பார் என தெரிய வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு பிரபல நடிகர் புகழ்ந்து பேசி உள்ளார் அந்த நடிகர் வேறு யாரும் அல்ல தளபதி விஜய் தான் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜ்க்கு போன் செய்து படம் மைண்ட் ப்ளூயிங் செம்ம சூப்பராக இருக்கு என கூறிபாராட்டினாராம். இந்த செய்தி தான் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் எப்படி விக்ரம் படத்தை பார்த்து விட்டு பாராட்டினாரோ அதேபோல கமலும் பீஸ்ட் படத்தைப் பார்த்துவிட்டு சின்னதாக விஜயையோ அல்லது இயக்குனரையோ பாராட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால் அந்த மனசு கமலுக்கு இல்லை என கூறி ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.