தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது தெலுங்கில் இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 66-வது திரைப்படமான வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜூ தயாரிக்கிறார்.
இரண்டு கட்ட சூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலைகள் மூன்றாவது கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்கிறார் மற்றும் குஷ்பூ, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பலர் நடித்து வருகின்றனர் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் தற்போது லோகேஷ் விறுவிறுப்பாக கதை எழுதி வருகிறாராம் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விஜய் பற்றிய செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. தளபதி விஜய் எனக்காக இல்லை எனது ரசிகர்களுக்காக படத்தில் ஒரு குத்து பாட்டு இரண்டு சண்டை காட்சிகள் வேண்டும் என சொல்லுவாராம்.
அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட சில பாடல்கள் இடம் பெற்றிருக்கும் அது குறித்து கூட லோகேஷ் கனகராஜ் சொல்லி இருந்தார் அந்த பசங்க ரெண்டு பேரும் தூக்கில் தூங்குவார்கள் அப்போது அந்த பாடல் படத்தின் கதைக்காக தேவைப்பட்டது மத்தபடி வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி எல்லாமே விஜய் ரசிகர்களுக்காக வைக்கப்பட்டதாக கூறினார்.
ஆனால் தளபதி 67 படத்தின் கதை ஒரு கேங்ஸ்டர் கதை என ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது தற்பொழுது வருகின்ற தகவல் என்னவென்றால் இந்த படத்தில் ஒரு பாடல் கூட இருக்காது என சொல்லி வருகின்றனர் விஜய் இதற்கு ஒத்துக் கொள்வாரா என்பது தான் மிகப்பெரிய ஒரு கேள்விக்குறி. இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை..