தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் தனக்கான ஸ்டைலில் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி வரும் நிலையில் தற்போது இவர் விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தினை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல நாட்களாக காஷ்மீரில் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் தான் சென்னை திரும்பினார்கள்.
எனவே முதற்கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு ஓய்வெடுத்த பட குழுவினர்கள் தற்பொழுது அடுத்த கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்துவதற்கு லோகேஷ் கனகராஜ் முடிவு எடுத்துள்ளார். எனவே இதன் காரணமாக விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜுக்கு கண்டிஷன் ஒன்றை போட்டிருக்கிறாராம்.
அதாவது காஷ்மீரின் படப்பிடிப்பின் பொழுது ஒட்டுமொத்த டெக்னீசியன்கள் மற்றும் அனைத்து நடிகர், நடிகைகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். கடுமையான குளிர், காய்ச்சல், நிலநடுக்கம் என பல பிரச்சனைகளை தாண்டி தான் இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. இவ்வாறு பல தடங்கல்கள் வந்தாலும் அனைவரும் வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்தனர்.
எனவே இது குறித்து அர்ப்பணிப்புடன் வேலை செய்த படக்குழுவினர்கள் பற்றிய வீடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனம் லியோ படத்தில் பணி புரிந்தது பற்றி வெளியிட்டு மரியாதை கலந்த நன்றியை தெரிவித்து இருந்தார்கள். எனவே இதனை மனதில் வைத்துக் கொண்டு விஜய் சென்னையிலேயே அடுத்த கட்டங்களை வைத்துக் கொள்ளலாம் என கூறி இருக்கிறாராம் ஏனென்றால் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தைப் பிரிந்து மிகவும் சிரமப்பட்டதனால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
மேலும் இதனை அடுத்து பெப்சி அமைப்பு முன்னணி நடிகர்களிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்திருக்கிறது. அதாவது டாப் ஹீரோக்களாக இருக்கும் அனைவரும் ஹைதராபாத் போன்ற வெளியிடங்களில் தான் படப்பிடிப்பை நடத்துகின்றனர். எனவே தமிழ் திரையுலக தொழிலாளர்களுக்கு சரியான வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்களாம் எனவே பெப்சி அமைப்பு முடிந்தவரை சென்னையிலேயே ஷூட்டிங்கை நடத்த கோரிக்கை முன் வைத்திருக்கும் நிலையில் நடிகர்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் சென்னையில் படப்பிடிப்பை நடத்த முடிவெடுத்துள்ளார்கள்.