விஜே சித்ரா கடைசியாக விஜய் டிவியில் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சி வைரலாகும் வீடியோ காணொளி.!

vj cithra

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார் என்பது தற்போது வரை சினிமா பிரபலங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் தான்.

டிசம்பர் 9ஆம் தேதி இரவு ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னையில் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனது வருங்கால கணவருடன் தங்கியுள்ளார்.

பின்னர் ஒருசில காரணங்களால் சித்ரா தனது வருங்கால கணவரை வெளியே அனுப்பிவிட்டு குளிக்க போவதாக கூறி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் சித்ராவின் தற்கொலையை தாங்கமுடியாமல் அவரது நண்பர்கள் தனது உடன் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சித்ரா கடைசியாக கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சி தான் ஸ்டார்ட் மியூசிக் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது அப்பொழுது அந்த நிகழ்ச்சியில் சந்தோசமாக தனது நண்பர்களுடன் சித்ரா ஆடியது, பாடியது, மிமிக்கிரி செய்வது என சந்தோசமாக இருந்துள்ளார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ காணொளியை விஜய் டிவி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளளது இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் பலரும் நீங்க இல்லாம போயிட்டீங்களே சித்ரா என கூறிவருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ காணொளி.