உனக்கும், எனக்கும் இருக்கும் பகை முடியாது.. அஜித்தை விடாமல் துரத்தும் விஜய்.! இப்ப எங்க மோதுறாங்க தெரியுமா

ajith-and-vijay
ajith-and-vijay

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். இவர் தற்பொழுது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே லோகேஷ் கனகராஜ் டைட்டில் வீடியோவை வெளியிட்டார்.

அது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை உச்சத்தில் நிறுத்தி உள்ளது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது படம் முழுக்க முழுக்க போதை பொருளை மையமாக வைத்து நகரும் என சொல்லப்படுகிறது தளபதி விஜய் உடன் இணைந்து த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், பிக்பாஸ் ஜனனி..

மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் படத்தில் நடித்து வருகின்றனர். லியோ படமும் லோகேஷின் யுனிவர்சலில் இணையும் என சொல்லப்படுகிறது. இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு சொல்லி வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் குறித்து ஒரு தகவல் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது திரையரங்கில் ஒரு மாஸ் காட்டிய வாரிசு திரைப்படம் அடுத்ததாக OTT தளத்திலும் வெளியாக இருக்கிறது.

விஜயின் வாரிசு திரைப்படம் வருகின்ற 22 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. விஷயத்தை கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் ஏற்கனவே தியேட்டரில் மோதுனது பத்தாதா.. OTT தளத்திலும் மோதுகிறீர்க.? வாங்க ஒரு கை பார்த்துக்கலாம் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.