அட எதுக்கு வம்பு ரோல்ஸ் ராய்ஸ் மொத்த வரியையும் கட்டியுள்ள விஜய்.! எவ்வளவு செலுத்தியுள்ளார் பார்த்தீர்களா.!

vijay-01

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருபவர் விஜய். உலகம் முழுவதும் கோடான கோடி ரசிகர்களைப் பெற்றிருப்பவர் விஜய் தான் இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறது  தற்பொழுது தளபதி விஜய் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்தநிலையில் விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார் பிரச்சினைதான் சமூகவலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார் மீதான வரி குறித்து எழுந்த புகாருக்கு விஜய் வரியை செலுத்தி விட்டார் என தமிழக அரசு விளக்கம் கொடுத்தது.

அந்த தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வந்தது தளபதி விஜய் 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் என்ற சொகுசு காரை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்தார். தான் வாங்கிய காரை தென்சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். ஆனால் தமிழக அரசு விதிக்கும் நுழைவு வழியை செலுத்த உத்தரவிட்டது இந்த நுழைவு வரி மிகவும் அதிகமாக இருந்ததால் வரியை ரத்து செய்யக் கோரி சென்னை உச்சநீதிமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு வழக்கைத் தொடர்ந்தார் விஜய்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கார் விலையிலிருந்து 20 சதவீத பணத்தை கட்டிவிட்டு காரை வட்டாரப் போக்குவரத்து கழகத்தில் பதிவு செய்து கொள்ள உத்தரவிட்டது இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுப்பிரமணியம் விஜயை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்ததுடன் ஒரு லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதனை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது அதில் விஜய் தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை நாங்கள் மதிக்கிறோம், அந்த உத்தரவை நாங்கள் எதிர்க்கவில்லை நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம் ஆனால் நீதிமன்றத்தில் அவதாரம் விதித்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினார்.

Vijay-Thalapathy-Rolls-Royce
Vijay-Thalapathy-Rolls-Royce

அதுமட்டுமில்லாமல் இது குறித்த அனைத்து விமர்சனங்களையும் ரத்து செய்ய வேண்டுமென தெரிவித்தார் இந்த நீதிபதியின் உத்தரவு தனிமனித நடிகரை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது அதனால் இந்த உத்தரவை நீக்க வேண்டுமென வணிகவரித்துறை எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு அதனை 7 முதல் 10 நாட்கள் செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறினார் விஜய் தரப்பு வழக்கறிஞர்.

அந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது அப்பொழுது ஏற்கனவே 20 சதவீத வரியை செலுத்திய தொகை போக மீதி உள்ள தொகையை செலுத்தினால் போதும் என நீதிமன்றம் அறிவித்தது அது மட்டுமில்லாமல் ஒரு லட்சம் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு விட்டார் ஏற்கனவே விஜய் செலுத்தியது போக 80 சதவீத வரியை செலுத்த வேண்டுமென உத்தரவிட்டார் இந்த நிலையில் விஜய் மீதமுள்ள 80 சதவீத வரியையும் செலுத்தி விட்டார் என வழக்கறிஞர் கூறியுள்ளார்.

Vijay-Thalapathy-Rolls-Royce