தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக வளம் வருவர் தளபதி விஜய். இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் தனது அடுத்த திரைப்படமான “லியோ” திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் போய் கொண்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து வெற்றிமாறன் உடன் ஒரு படம் பண்ணிருக்கிறார். இப்படிப்பட்ட விஜய் உடன் நடிக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் ஆனால் ஒரு சில நடிகர்கள் அதை வேண்டாம் என நேரடியாக மறுத்தும் விடுகின்றனர் அப்படி விஜய் படம் வேண்டாம் என ஒரு நடிகர் உதறி தள்ளி சம்பவத்தை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்..
விஜய் தனது சினிமா பயணத்தில் எத்தனையோ வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் அதில் ஒன்று தெறி. படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இது உருவாகியிருந்தது படத்தில் விஜய் உடன் இணைந்து சமந்தா, நைனிகா, எமி ஜாக்சன், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்து அசத்தி இருந்தனர்.
இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக இயக்குனர் மகேந்திரன் நடித்திருப்பார் ஆனால் முதலில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க வேண்டியது வேறு ஒரு பிரபலமாம்.. அவர் வேறு யாருமில்லா 80 கால கட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்த மைக் மோகனை தான் தேர்வு செய்ய பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் அவரோ நான் விஜய் படத்தில் எல்லாம் வில்லனாக நடிக்க மாட்டேன் என கூறி உதறி தள்ளினாராம்.. நீண்ட இடைவேளைக்கு பிறகு மைக் மோகன் தற்பொழுது “ஹரா” என்னும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த தகவல் தற்போது தளபதி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.