Vijay : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகன் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது அதனை தொடர்ந்து வெற்றி இயக்குனர் லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் படமாக வந்து உள்ளது. வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கு முன்பாகவே ரசிகர்களை சந்தோஷப்படுத்த லியோ டீம் அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டு வந்தது செப்டம்பர் 30ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடத்தும் என கூறியது.
ஆனால் சில தினங்களுக்கு முன் கேன்சல் என அறிவித்தது. லியோ ஆடியோ லான்ச் கேன்சலுக்கு அரசியல் காரணங்கள் இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். கலாநிதி மாறன் அல்லது ரெட் ஜெயண்ட் அல்லது திமுக அரசு காரணமாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல பொலிடிகல் விமர்சகர் ரவீந்திரநாத் பேசி உள்ளது என்னவென்றால்.. அஜித்தின் துணிவு படம் கடந்த பொங்கலுக்கு வெளியானது இந்த படத்தை எதிர்த்து விஜயின் வாரிசு படம் வெளியானது தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனம் தான் வாங்கி ரிலீஸ் பண்ணியது.
எங்க துணிவு திரைப்படம் சோலோவாக வெளியாகி வெற்றி கண்டு விடுமோ என்ற பயத்தில் தான் விஜயின் வாரிசு படம் போட்டி போட்டது என கூறினார் ஆனால் விஜய் பல இடங்களில் எனக்கு போட்டி யாரும் இல்லை என்கிறார் ஆனால் அவர் அஜித்துடன் போட்டி போடுகிறார். உண்மையில் விஜய்க்கு போட்டியாளர் அஜித் தான் என மறைமுகமாக இவர் பேசியுள்ளது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.