அஜித்திற்காக இறங்கி வந்த விஜய்.! வெளியான துணிவு, வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி…

ajith-vijay
ajith-vijay

தென்னிந்திய சினிமாவில் இரண்டு உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்கள் நடிகர் ரஜினி மற்றும் கமல் இவர்களுக்கு அடுத்த படியாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். கடந்த எட்டு வருடங்களுக்க தனித்தனியாக படங்களை கொடுத்து வந்த அஜித் மற்றும் விஜய் தற்போது எட்டு வருடங்கள் கழித்து திரையில் ஒரே நேரத்தில் மோதிக்கொள்ள இருக்கிறார்கள்.

அஜித் அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படமும் விஜய் அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் கிட்டத்தட்ட ஒரு நேரத்தில் வெளியாகிறது. ஏற்கனவே வீரம் மற்றும் ஜில்லா ஆகிய இரண்டு படங்களின் மூலம் மோதிக்கொண்ட இவர்கள் தற்போது மீண்டும் துணிவு மற்றும் வாரிசு படத்திற்காக மோத இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து எப்படியாவது ஒருவரை ஒருவர் முந்த வேண்டும் என்பதற்காக இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பிரமோஷன் செய்து வருகிறார்கள் அந்த வகையில் சமீபகாலங்களாக விஜய் அவர்கள் இறங்கி வாரிசு படத்திற்காக ப்ரோமோஷன் செய்து வருகிறார் ஆனால் அஜித் அவர்கள் படம் நல்லா வந்தாவே பிரமோஷன் என்று கூறிவிட்டார்.

ஆனால் அதெல்லாம் கேட்காத துணிவு படகுழு தங்களால் முடிந்தவரை ப்ரோமோஷன் செய்து வருகிறது இந்த நிலையில் துணிவு படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வாரிசு படத்தின் டிரைலர் ஜனவரி 4 ஆம் தேதி வெளியாகிறது என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து வாரிசு மற்றும் துணைவி படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். விஜயின் வாரிசு படம் ஜனவரி 12ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அஜித்தின் துணிவு திரைப்படம் வாரிசு படத்தின் ஒரு நாள் முன்பு ஜனவரி 11ஆம் தேதி வெளியாக உள்ளது என்று உறுதி செய்யப்பட்ட தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் இணையத்தில் ஆர்ப்பரிக்கின்றனர் இதனை தொடர்ந்து இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒரே தினத்தில் வெளியாவதால் டிக்கெட்டின் விலை தாறுமாறாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.