இயக்குனர் நெல்சன்னுக்கு போன் போட்ட தளபதி விஜய்.! என்ன சொன்னார் தெரியுமா.?

nelson
nelson

தளபதி விஜய் எப்பொழுதும் மாஸ் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.  அதில் கொஞ்சம் கமர்ஷியல் கலந்து இருக்கும் அதனால் அவரது திரைப்படங்கள் எப்பொழுதும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் அப்படித் தான் இவரது 65வது திரைப்படமான பீஸ்ட் படத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு பீஸ்ட் திரைப்படம் அமையவில்லையாம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாள் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக பார்த்ததால் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி புதிய சாதனை படைத்தது.

ஆனால் அடுத்தடுத்த நாட்களில் பீஸ்ட் படத்திற்கான வசூல் குறைந்து கொண்டே இருக்கின்றன. இருப்பினும் விஜய்யின் ரசிகர்கள் தமிழ்நாட்டையும் தாண்டி பிற பகுதிகளிலும் இருப்பதால் படத்தின் பட்ஜெட்டையும் தாண்டி ஓரளவு வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியான கேஜிஎப் 2 திரைப்படம்.

ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது அந்த படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்த படமாக இருப்பதால் ரசிகர்கள் ரொம்ப பிடித்து போய் விட்டது மேலும் அந்த படம் வசூல் வேட்டையும் சிறப்பாக நடத்துகின்றனர். இது பீஸ்ட் படத்திற்கு செம்ம பாதகமாக அமைந்து உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய்.

இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு கால் செய்து ஆறுதல் கூறி உள்ளாராம் அதில் அவர் சொல்லி உள்ளது விமர்சனங்களை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள் நாம் மீண்டும் ஒரு படம் இணைந்து செய்யலாம் என கூறினாராம் விஜய். ஆனால் சற்று பதட்டமும் இல்லாமல் இருக்கிறார் நெல்சன்.