Vijay : ரஜினிக்கு அடுத்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஒருவர் தளபதி விஜய் வாரிசு படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
படம் மிகப்பெரிய ஒரே ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தில் மிஸ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் போன்ற பலர் நடித்துள்ளனர் படத்தின் ஷூட்டிங் அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகளை நோக்கி படக்குழு நகர்ந்து உள்ளது.
மறுபக்கம் அப்டேட்டுகளும் அனல் பறக்க வந்து கொண்டிருக்கின்றன. கடைசியாக வெளிவந்த “நான் ரெடி” பாடல் பெரிய அளவில் வைரலானவை தொடர்ந்து அடுத்ததாக இசை வெளியீட்டு விழா, டிரைலர் போன்றவற்றை ரசிகர்கள் பெரிதும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் மறைந்த காமெடி நடிகரும், இயக்குனருமான மனோ பாலா விஜய் பற்றி பேசியுள்ளது தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது மனோபாலா ஒரு தடவை விஜய்யிடம் நீங்கள் ஏன் சுறா படத்தில் நடித்தீர்கள் என கேட்க அதற்கு விஜய் வெளிப்படையாக பதிலை சொல்லி உள்ளார்.
அதை ஏன் அண்ணா கேக்குறீங்க.. படக்குழு வந்தாங்க.. உங்கள் அடிப்பாங்க அடிச்சிட்டு தரையில் தூக்கி போடாம ஏன்டா தண்ணீரில் தூக்கி போட்ட கேப்பாங்க அதுக்கு தான் அவன் சுறாவா நீந்தி வருவான் எல்லாம் டயலாக் சொன்னாங்க அதனால தான் நடிக்க ஓகே சொன்னேன் என விஜய் கூறியுள்ளார். இதற்கு மனோபாலா டயலாக்கை கேட்டுட்டு எல்லாம் ஓகே சொல்ல கூடாது என கூறினாராம்.