தளபதி பிறந்தநாளில் விஜய் ரசிகர்களுக்கு சிம்பு வைக்கும் ட்ரீட்.! இது எப்படி இருக்கு

simbu vijay
simbu vijay

நடிகர் சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் கடைசியாக விண்ணைத்தாண்டி வருவாயா அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்கள் வெளியானது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளார்கள்.

இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய இரண்டு படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால் தற்பொழுது மூன்றாவது திரைப்படமும் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் ஆக உருவாகும் இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் விரைவில் இந்த படப்பிடிப்பு முடிவடைய இருக்கிறது.

அப்படி இருக்கும் வகையில் இந்த திரைப்படத்தை வருகின்ற ஜூன் 22ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் விதமாக அமைந்துள்ளது. விஜய் ரசிகர்களுக்கும் சிம்பு ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு கொண்டாட்டமான திரைப்படமாக அமைய இருக்கிறது.

இந்த நிலையில் விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

simbu