விஜய் பிறந்தநாளில் அஜித் பற்றி ட்வீட் போட்ட முக்கிய அரசியல் பிரபலம்.! ஒரு வேளை இவரும் அஜித் ரசிகரா.?

ajith-vijay

தமிழ் சினிமாவில் இரு துருவங்கள், இருபெரும் நடிகர்கள் என சொல்லிக் கொண்டே போகலாம், அதேபோல் மிகப் பெரிய நடிகராக வலம் வருபவர்களில் அஜித், விஜயும் உண்டு, இவர்களின் ரசிகர் கூட்டத்தை யாராலும் அளவிட முடியாது அந்த அளவு எல்லை தாண்டி இருக்கிறது.

அதேபோல் நடிப்பில் ஒருவரை ஒருவர் சளைத்தவர் கிடையாது, அந்தளவு இருவரும் நடிப்பில் திறமைசாலிகள், இவர்களின் திரைப்படம் திரையரங்கிற்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும் அப்படி ரசிகர்கள் பாலாபிஷேகம், கட்டவுட், பேனர்கள், ஆட்டம், பாட்டம் என அமர்க்களப்படுத்தி விடுவார்கள்.

இந்த நிலையில் நேற்று தளபதி விஜய்க்கு பிறந்தநாள் அதனால் திரைப்பிரபலங்கள் ரசிகர்கள், அரசியல் பிரபலங்கள் என அனைவரும் விஜய்க்கு வாழ்த்து கூறி வந்தார்கள், அதேபோல் அஜித் ரசிகர்கள் விஜய்யின் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு போட்டியாக ஒரு புதிய ட்க்கை கிரியேட் செய்து ட்ரெண்டிங்கில் கொண்டுவந்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த டாக்கை பயன்படுத்தி திரை பிரபலங்களும் அஜித்தை பற்றி பதிவிட்டு வந்தார்கள், அந்தவகையில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான அழகிரி அவர்களும் ரஜினியும் அஜீத்தும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நண்பனும் தம்பியும் என பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த ட்வீட்…