தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவர் வசூல் மன்னனாக வலம் வருகிறார், சினிமாவில் ஒருமுறை பெயர் எடுத்துவிட்டால் சுமாரான திரைப்படங்கள் கூட கோடிக்கணக்கில் வசூல் செய்யும். இந்த நிலையில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் சுமார் 300 கோடி வரை வசூல் செய்தது.
அட்லி இதற்கு முன் இயக்கிய தெறி, மெர்சல் ஆகிய திரைப்படங்கள் திரைக்கதை நன்றாக அமைந்தது ஆனால் பிகில் திரைப்படத்தில் கதை கொஞ்சம் சரி இல்லை என்றாலும் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. எது எப்படி இருந்தாலும் பிகில் திரைப்படம் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துவிட்டது.
இந்த நிலையில் இணையதளங்களில் விஜய் பைக் ஓட்டும் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது, இந்த காட்சி பிகில் திரைப்படத்தில் விஜய் பைக் ஓட்டுவது போன்று எடுக்கப்பட்டிருந்தது, ஆனால் இந்த காட்சியை டூப் போட்டு தான் எடுத்தார் என விஜயை பிடிக்காதவர்கள் பலர் கூறினார்கள். அதுமட்டுமல்லாமல் பைக் ஸ்டன்ட் சீன்களை விஜய் ஒரிஜினலாக செய்ய மாட்டார் எனவும் வதந்தி பரவியது.
இதனை அனைத்தையும் முறியடிக்கும் விதமாக தற்பொழுது பிகில் திரைப்படத்தில் பைக் ஸ்டண்ட் செய்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, விஜய்க்கு பைக் ஓட்ட தெரியாது என கூறிய பலருக்கு இந்த வீடியோ பதிலடி கொடுத்துள்ளது.
Original ah U Turn potrukaru…?#Bigil Shooting Spot! pic.twitter.com/6flOmcexjB
— ?NU ?rizzLina (@Its__Anu) March 23, 2020