விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பான எபிசோட்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா. ராஜா ராணி 2 மற்றும் பாரதிகண்ணம்மா இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்பொழுது விறுவிறுப்பான பல காட்சிகள் அரங்கேறி உள்ளது.
அதாவது ஹேமா தன்னுடைய பிறந்தநாள் அன்று என்னுடைய அம்மாவை பார்க்க வேண்டும் என பாரதியிடம் கேட்ட நிலையில் பாரதி தனது முன்னாள் காதலி ஹேமாவின் புகைப்படத்தை வரைந்து இவள் தான் உன்னுடைய அம்மா எனக் கூறினார். இதனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் கண்ணம்மா அனைவரிடமும் ஹேமா என்னுடைய மகள்தான் எனக்கு இரட்டை குழந்தை பிறந்தது என்ற உண்மையை உடைத்தார்.
இது பாரதிக்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில் என்னுடைய அம்மா,அப்பா கூட எனக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என மன வருத்தத்தில் இருந்து வருகிறார் பிறகு ஹேமா தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவரின் பக்கத்தில் அமர்ந்து நீ என்னுடைய மகள் நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது எனக்கூறி பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ஹேமா என்னுடைய அம்மா மிகவும் அழகாக இருந்தாங்க அதை காண்பிக்க என்னுடைய அப்பாவுக்கு நன்றி எனக்கு தூக்கத்தில் உளறுகிறார்.
ஒருபுறம் லட்சுமி கண்ணம்மாவிடம் ஹேமாவின் அம்மாவை பற்றி கேட்க கண்ணம்மா லட்சுமியின் மீது கோபமடைகிறார்.இதன் காரணமாக லட்சுமிக்கு சந்தேகம் ஏற்படுகிறது இப்படிப்பட்ட நிலையில் இன்று வெளியாகிவுள்ள எபிசோடில் பாரதி பேரன்ட்ஸ் மீட்டிங் என்பதற்காக ஹேமாவின் ஸ்கூல் இருக்கு செல்கிறார்.
லட்சுமியை வெளியில் நிக்க வைத்துள்ள நிலையில் கண்ணம்மா வராத காரணத்தினால் பாரதியிடம் டாக்டர் அப்பா எனக்கும் நீங்களே அப்பாவாக இந்த மீட்டிங்கில் கலந்து கொள்ளுங்கள் எனக் கூற பாரதி மிகவும் வேகமாக நடந்து வருகிறார்.லட்சுமி பின்னாடியே ஓடி மீண்டும் கேட்க பேரன்ட்ஸ் மீட்டிங்கில் உன்னுடைய அம்மா,அப்பா தான் கலந்து கொள்ள வேண்டும் நான் கலந்து கொள்ள கூடாது என கூறியதால் கோபமடைந்து அப்பா என கூப்பிட நீங்கள் தான் என்னுடைய அப்பா என தெரியும் என கூறுகிறார் பிறகு பாரதி பார்த்துவிட்டு அப்படியே போகிறார். லக்ஷ்மி அழுதும் கண்டுகொள்ளாமல் பாரதி செல்வது மிகப்பெரிய வருத்தினை தருகிறது இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.