கோலாகலமாக நடைபெற்ற விஜய் பட நடிகையின் திருமணம்.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

vijay
vijay

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தற்பொழுது லியோ திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் தற்பொழுது விஜய் பட நடிகை ஒருவருக்கு மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது ‘ஞான் நின்னோடு கூடேயுண்டு’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர்தான் அபர்ணா வினோத். இந்த படத்தினை அடுத்து தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தினை பரதன் இயக்கியிருந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் இவர்களை தொடர்ந்து ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சதீஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களோடு இணைந்து அபர்ணா வினோத்தும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இந்த படத்தின் மூலம் இவர் பிரபலமடைந்த நிலையில் பிறகு பரத்துடன் இணைந்து நடுவன் திரைப்படத்திலும் கதாநாயகியாக அபர்ணா வினோத் நடித்திருந்தார். இவர் கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ரினில் ராஜ் என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் பிறகு தங்களுடைய பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமண ஏற்பாட்டை மேற்கொண்டனர்.

aparna vinoth 1
aparna vinoth 1

இப்படிப்பட்ட நிலையில் ரினில் ராஜ் மற்றும் அபர்ணா வினோத் இவர்களுடைய திருமணம் சமீபத்தில் கேரளா மாநிலத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று உள்ளது இந்த திருமணத்தில் இவர்களுடைய நெருங்கிய குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

aparna vinoth
aparna vinoth

இவ்வாறு தற்பொழுது இவர்களுடைய திருமண புகைப்படங்களை அபர்ணா வினோத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அழகிய திருமண புகைப்படங்கள்.