தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்தை வம்சி இயக்க தில்ராஜ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாக தயாராக இருக்கிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தொடர்ந்து சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் வருகின்ற 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியாவதற்கான பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்ற வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் ஆந்திராவில் தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. டப்பிங் படங்களுக்கு குறைவான தியேட்டர்கள் மட்டும்தான் ஒதுக்கப்படும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் அறிவித்துள்ளது இதனால் வாரிசூ திரைப்படத்தின் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் கே ராஜன் தமிழ் சினிமாவில் விஜய் பெரிய நடிகர் என்பதற்கு மாற்று கருத்தை இல்லை ஆனால் அவருக்கு தெலுங்கிலும் கொஞ்சம் கூட மார்க்கெட் இல்லை விஜய்யை விட சூர்யாவுக்கு தான் தெலுங்கில் மார்க்கெட் அதிகம். கேரளாவில் தான் விஜய்க்கு மார்க்கெட் இருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது தெலுங்கு பட தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் வாய்ப்பு கொடுத்து விஜய் பெரிய தவறு செய்து விட்டார்.
தெலுங்கு திரைவுலகில் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சொல்வது தான் சட்டம் மேலும் அங்கே பெரிய கட்டுப்பாடு இருக்கிறது. தமிழ் திரைவுலகில் தான் தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த ஒரு கட்டுப்பாடுமே இல்லை அவங்களோட ஹீரோ தான் வாழனும்னு அவங்க முன்னுரிமை கொடுப்பதில் தவறு இல்லை. பவன் கல்யாண் மற்றும் பாலகிருஷ்ணா படங்களுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு வாரிசு படத்துக்கு 25 சதவீத தியேட்டர்கள் ஒதுக்கியதே பெரிய விஷயம்.
தமிழ்நாட்டில் தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ராங்காகவே இல்லை பாகுபலி, கேஜிஎஃப் என எந்த மொழி படம் வந்தாலும் தியேட்டர்களை வாரி கொடுக்கிறார்கள். இது ரொம்ப மடத்தனம் வந்தாரை வாழ வைக்கிறேன்னு சொல்லிட்டு இங்கேயே உள்ளவர்களை சாகடிக்கிறாங்க நடிகர் விஜய் தனது சம்பளத்தை 125 கோடி வரை சஉயர்த்தியது தயாரிப்பாளர்களுக்கு செய்த துரோகம்.
அதன் காரணமாக அவர் தனது மார்க்கெட்டை பெரிது படுத்த நினைக்கிறார் ஆனால் தமிழ் இயக்குனருக்கும், தமிழ் தயாரிப்பாளருக்கும் லாபம் செல்லும் வகையில் அவர் செயல்பட வேண்டும். அப்படி பண்ணவில்லை அதன் பயனை தான் வாரிசு படத்தின் மூலம் அனுபவிக்க காத்திருக்கிறார் என தயாரிப்பாளர் கே.ராஜன் நடிகர் விஜய் பற்றி கூறியிருக்கிறார்.