ஹார்பர் ரவுடிகளை பந்தாடும் தளபதி விஜய் – “வாரிசு” படப்பிடிப்பு தளத்திலிருந்து லீக்கான வீடியோ.!

vijay-
vijay-

தளபதி விஜய் தொடர்ந்து சினிமாவில் கமர்சியல் ஆக்சன் போன்ற திரைப்படங்களை கொடுத்து வருகின்ற நிலையில் இவரது படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கின்றதோடு மட்டுமல்லாமல் நல்ல வசூலை ஈட்டுகிறது. பிகில், மாஸ்டர் மற்றும் பீஸ்ட் போன்ற திரைப்படங்களை..

தொடர்ந்து தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கைகோர்த்து வாரிசு எனும் படத்தில் நடித்த வருகிறார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளதாம். தமிழில் வாரிசு என்ற பெயருடன் வெளியாகி பின்பு வரசூடு என்று மொழிபெயர்க்கப்பட்டு தெலுங்கில் வெளியாகும் என தில் ராஜு கூறியிருக்கிறார்.

இந்த படம் ஒரு ஃபேமிலி சென்டிமென்ட் ஆக்சன் கமர்சியல் போன்ற அனைத்தும் கலந்து இருப்பதாக அண்மையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரத்குமார் கூறியிருந்தார். வாரிசு படத்தில் முதல் முறையாக விஜய் உடன் கை கோர்த்து நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் குஷ்பு, ஷியாம், பிரபு, ஸ்ரீகாந்த், யோகி பாபு, சங்கீதா, ஜெயசுதா மற்றும் சில நடிகர் நடிகைகளும் நடித்து வருகின்றனர்.

இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளதை அடுத்து படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில் விஜய் படத்திற்கு வந்த சோதனை என்னவென்றால் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகிய வண்ணமே இருக்கின்றன. அண்மையில் கூட வாரிசு பட சூட்டிங்கில் ஃபைட் சீனில் விஜய் நடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியது.

அதைத்தொடர்ந்து தற்போது விஜய் செம மாசாக ஃபைட் செய்யும் வீடியோவே வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த பட குழு எவ்வளவு தான் சீக்ரெட் ஆக படப்பிடிப்பை எடுத்து வந்தாலும் எப்படித்தான் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகிறதோ என கடுப்பில் இருக்கின்றன.