பீஸ்ட் கேஜிஎப் திரைப்படத்திற்கு முன்னாடியே வெளியாகும் செல்வராகவனின் திரைப்படம்.!

selvaragavan-beast

செல்வராகவன் தமிழ் சினிமாவில் இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் இந்த நிலையில் தற்பொழுது நடிகராகவும் களமிறங்கியுள்ளார் அந்த வகையில் 2021 டிசம்பர் ராக்கி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் சாணி காயிதம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் செல்வராகவனுக்கு தங்கையாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது கிராமத்து பின்னணியில் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக OTT இணையதளத்தில் வெளியாக இருக்கிறது. ஏப்ரல் 7 ஆம் தேதி அமேசன் பிரைமின் நேரடியாக வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது எனக் கூறப்படுகிறது.  இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் நடக்கும் ஒரு பழிவாங்கும் ஆக்சன் திரைப்படம் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடித்துள்ள செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.  மேலும் இந்த திரைப்படத்திற்கு கைதி  திரைப்படத்தின் இசை அமைத்த சாம்சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக இருக்கும் பீஸ்ட்திரைப்படத்திலும் செல்வராகவன் நடித்துள்ளார். அதனால் ஏப்ரல் மாதத்தில் செல்வராகவன் நடித்த இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் செல்வராகவான் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

saani-kaakitham
saani-kaakitham