அதற்குள் OTT-யில் வெளியாகப் போகிறதா பீஸ்ட் திரைப்படம்.? வெளியான அதிர்ச்சித் தகவல்.!

vijay beast ott release
vijay beast ott release

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நெல்சன் திலீப் குமார் அவர்களுடன் இணைந்து beast திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. இதற்கு முன் நெல்சன் திலிப்குமார் கோலமாவு கோகிலா டாக்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கினார் அந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. விஜய்யின் முதல் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் உருவாகியது.

ஆரம்ப காலத்தில்  திரையரங்கிற்கு வரும் திரைப்படங்கள் மட்டும்தான் மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு பெற்று இருந்தது ஆனால் சமீபகாலமாக OTT யில் வெளியாகும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது அது மட்டும் இல்லாமல் நேரடியாக OTT க்கு வரும் திரைப்படங்களும் திரையரங்கிற்கு வந்த பிறகு OTT க்கு வரும் பெரிய படங்களும் வியாபாரரீதியாக நல்ல வரவேற்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஒரு காலகட்டத்தில் ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியானால் 100 நாட்கள் 200 நாட்கள் என திரையரங்கில் ஓடும் ஆனால் சமீபகாலமாக எந்த மிகப்பெரிய ஸ்டார் நடிகராக இருந்தாலும் அதிக நாட்கள் திரையரங்கில் ஓடுவது கிடையாது அதற்குக் காரணம் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருப்பதே காரணம் என கூறப்படுகிறது.

அதேபோல் திரையரங்கிற்கு வரும் திரைப்படங்கள் எப்பொழுது ott க்கு வழங்கலாம் என்ற விதிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படம் OTT ரிலீஸ்  தேதி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடமும் நிலவி வருகிறது. மேலும் பீஸ்ட் திரைப்படத்தை நெட்பிலிக்ஸ் மற்றும் சன் பிக்சர் நிறுவனம் இணைந்து OTT யில் வெளியிட இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

50 சதவீத பார்வையாளர்கள் அனுமதியுடன் திரையரங்கில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் வெளியான மூன்றே வாரத்தில் OTT யில் அமேசன் ப்ரைமில் போடப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் 4 வாரங்கள் கழித்துதான் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதாவது வருகின்ற மே மாதம் 11ஆம் தேதி  பீஸ்ட் திரைப்படம் ott இணையதளத்தில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த தகவல் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து கிடைத்துள்ளது.