தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்தத் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
பீஸ்ட் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, யோகி பாபு செல்வராகவன், அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். அனிருத் இசையில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. கொரோனா காரணமாக இசை வெளியீட்டு விழா பீஸ்ட் திரைப்படத்திற்கு நடத்த முடியாமல் போனது அதனால் சன் தொலைக்காட்சியில் பீஸ்ட் படக்குழு நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார்கள்.
அந்த நிகழ்ச்சி வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. அதேபோல் இந்த நிகழ்ச்சியை நெல்சன் தான் தொகுத்து வழங்கியுள்ளார் எனவும் அப்பொழுது விஜயிடம் பல சுவாரசியமான கேள்விகளை கேட்டுள்ளார் எனவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்திருந்தது.
அதேபோல் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎஃப் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதால் இரண்டு திரைப்படங்களுக்கும் கடும் போட்டி நிலவி வரும். இதற்கு முன் கேஜிஎப் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது படக்குழு.
அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரை தற்போது சன் பிக்சர் நிறுவனம் வெளியிட்டுள்ளது இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.