கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் தற்போது விஜய்யை வைத்து beast திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. பொதுவாக விஜய் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஆனால் இந்த முறை எந்த ஒரு இசை வெளியீட்டு விழாவும் இல்லாமல் அதற்குப் பதிலாக தளபதி விஜய், தொலைக்காட்சியில் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி வருகின்ற ஏப்ரல் 10-ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் பீஸ்ட் திரைப்படத்தில் யோகி பாபு, பூஜா ஹெக்டே , செல்வராகவன், அபர்ணா தாஸ் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்திலிருந்து அரபி குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று சாதனை படைத்தது இதனைத்தொடர்ந்து விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடலும் வெளியாகி வைரலானது ஆனால் அரபிய குத்துப்பாடல் அளவிற்கு ஜாலியோ ஜிம்கானா பாடல் ரிச் ஆகவில்லை.
அதேபோல் பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி என 5 மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் ரிலீஸ் இன்னும் சில வாரங்களே இருக்கின்ற நிலையில் படத்தின் டிரைலரை ஏப்ரல் 2 ஆம் தேதியான நாளை மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறது படக்குழு.
இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பீஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த முடியாமல் போனது அதற்கு பதிலாக விஜய் தொலைக்காட்சியில் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார் இந்த நிகழ்ச்சியை வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி ஒளிபரப்பா இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த நேர்காணல் நிகழ்ச்சியை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தான் தொகுத்து வழங்க இருக்கிறாராம். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் நெல்சன் திலீப்குமார் விஜயிடம் பல சுவாரசியமான கேள்விகளை கேட்டுள்ளார் என கூறப்படுகிறது. இயக்குனராக இருக்கும் நெல்சன் திலிப்குமர் பீஸ்ட் திரைப்படத்திற்காக தொகுப்பாளராக அவதாரம் எடுத்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.