தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல புதுமுக நடிகைகள் நடித்து வருகிறார்கள் அதிலும் சமூக வலைதளத்தை பயன்படுத்தி மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்கள் அதனால் அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைத்து வருகிறது இந்த நிலையில் அருவி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை அதிதி பாலன்.
இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் சமீபத்தில் தெலுங்கில் நாணியின் சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படத்தில் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் இவர் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் பேசிய அதிதி பாலன் தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்றேன் படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கால் மணி நேரத்திலேயே படம் பிடிக்காமல் தூங்கி விட்டேன் என கூறியுள்ளார்.
நான் தூங்கியதை என்னுடைய நண்பர்கள் வீடியோ எடுத்து கலாய்த்ததாகவும் அவர் கூறினார் மேலும் இவர் பேட்டியை பார்த்த விஜய் ரசிகர்கள் தூங்குவதற்கு எதற்கு படத்திற்குப் போனாய் வீட்டிலேயே தூங்கி இருக்கலாமே என கலாய்த்து வருகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் பீஸ்ட் திரைப்படம் அருமையான திரைப்படம் அ ரைப்படத்தை பார்க்க போய் தூங்கினீங்கன்ன இதை யாராலும் நம்ப முடியும் எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.