தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகர்களில் அஜித்தும், விஜய்யும் ஒரு முக்கியமான நடிகர்கள் மேலும் விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாகயுள்ளது என தகவல் கிடைத்துள்ளது.
அஜித்தின் வலிமை திரைப்படம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் அஜித் பைக் வீலிங் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டிங் ஆனதை நாம் பார்த்தோம்.
இந்நிலையில் அஜீத் நடிப்பில் பேரரசு இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் திருப்பதி இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது என்பது பலருக்கும் தெரியும் மேலும் இந்த படத்தின் பூஜையில் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக அஜித்திடம் படக்குழுவினர்கள் கூறியபோது அஜித் அதை நம்ப வில்லையாம்.
ஆனால் பூஜையின் போது விஜய் சரியான நேரத்தில் வந்துவிட்டாராம் இதை சற்றும் எதிர்பார்க்காத அஜித் ஒரு சில நொடிகள் கழித்து தான் விஜய்க்கு கை கொடுத்துள்ளாராம் என்று இயக்குனர் பேரரசு கூறியதாக சமூக வலைதள பக்கங்களில் இந்த தகவல் வைரலாகி வருகிறது.