தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிகிறார். இவர் இதுவரை நடித்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி திரைப்படங்கள் தான் இப்பொழுது கூட தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தற்போது ஹார்பர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது வருகிறது.
இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் கைகோர்த்து குஷ்பூ, ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்த வருகின்றனர். வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து திரைப்படமாக உருவாகி வருவதாக..
வாரிசு படத்தின் தயாரிப்பாளர்கள் தில் ராஜூ மற்றும் சரத்குமார் போன்றவர்கள் ஏற்கனவே சொல்லி உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 2012 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துப்பாக்கி.
இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்து படமாக இருந்ததால் அப்பொழுது வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து சத்யன், காஜல் அகர்வால் அசத்தி இருந்தனர் இந்த படம் அப்பொழுது வெளிவந்த 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது இந்த திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து தளபதி விஜய் முக்கிய சினிமா பிரபலங்களை அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார்
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், முருகதாஸ், விக்ரம், உதயநிதி என பலரும் கலந்து கொண்டு அசத்தி உள்ளனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.