சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடும் நடிகர், நடிகைகளை பற்றி தொடர்ந்து செய்திகள் வெளிவரும்.. அப்படி தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து அசத்தி வருகின்றனர்..
அந்த வகையில் தளபதி விஜய் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாக இருக்கிறது இந்த படம் ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருந்தாலும் இந்த படத்திலும் சென்டிமென்ட் சீன்கள் அதிகம் இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் அஜித் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61வது திரைப்படமான துணிவு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்துள்ளது படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாகியுள்ளது.
இதன் மூலமும் அடுத்த பொங்கலுக்கு அஜித் – விஜய் படங்கள் மோதிக் கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ஆரம்ப காலகட்டத்தில் அஜித் விஜய் தொடர்ந்து படங்களில் மூலம் மோதின.
அப்பொழுது பத்திரிகையாளர்கள் அஜித் – விஜய் என எழுதினார் ஒரு கட்டத்தில் விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு ஒரு சில முக்கிய பத்திரிக்கையாளர்களை அழைத்து இனி அஜித் விஜய் என எழுதாதீர்கள் விஜய் – அஜித் என எழுதுங்கள்.. என்னுடைய பெயரை முன்னாடி போடுங்கள் என கேட்டுக் கொண்டாராம்.. இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது..