தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய் இவர்கள் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். அப்படி அஜித் அவர்கள் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் இதனை தொடர்ந்து விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் தற்போது முடிவடைந்த நிலையில் போஸ்ட் பிரமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.
இதனை தொடர்ந்து விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படமும் அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. பல வருடங்கள் கழித்து அஜித் விஜய் படங்கள் ஒரே தினத்தில் மோத உள்ளதால் ரசிகர் மதியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படி இவர்கள் இருவரும் மோதி கொண்டிருக்கும் நிலையில் இவர்களுடைய ரசிகர்கள் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிப்பார்கள் என்று தற்போது வரையும் எதிர்பார்த்து வருகின்றனர் ஆனால் இப்படி ஒரு வாய்ப்பு 2015 ஆம் ஆண்டு கிடைத்தது ஆனால் அது எப்படி மிஸ் ஆனது என்பதை பற்றி தான் தற்போது நாம் பார்க்கிறோம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் மோகன்ராஜ் இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் திரைப்படத்தில் ஹீரோவாக ஜெயம் ரவியும் வில்லனாக அரவிந்த் சாமியும் நடித்திருந்தார்கள் ஆல் முதலில் தனி ஒருவன் திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு பதிலாக விஜய்யும் அரவிந்த்சாமிக்கு பதிலாக அஜித்தையும் நடிக்க வைக்கத் திட்டம் தீட்டினார் மோகன் ராஜா.
அது மட்டுமல்லாமல் தனி ஒருவன் படத்தில் இடம்பெற்ற வில்லன் கதாபாத்திரத்தை மோகன் ராஜா அஜித்தை நினைவு படுத்தி தான் எழுதியிருந்தாராம் ஆனால் இந்த படத்தில் அஜித் அவர்கள் நடிக்க முடியாமல் போய் உள்ளது. இதே போல ஹிரோவாக நடிகர் விஜய் முதலில் முடிவு செய்து இருந்தார். ஆனால் விஜய் அவர்கள் ஜெயம் ரவியை வைத்து இந்த படத்தை எடுக்க சொல்லி இருக்கிறார் அதன் பிறகு ஜெயம் ரவி அரவிந்த் சாமி தான் இந்த படத்தில் நடித்தார்கள் ஆனால் அஜித் விஜய் முன்பே நடித்திருந்தால் இந்த படம் இன்னும் மாபெரும் வெற்றி அடைந்திருக்கும் என்று தற்போது கூரி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் விரைவில் இணைந்து ஒரு படத்தில் நடிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.