Vijay Antony: கடைசியாக தனது மகளின் உடலை பார்த்து அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து வாழ்வோம் மகளே என்று விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா கதறி அழுது உள்ளார். விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று தற்கொலை செய்து கொண்டது திரை உலகினர்கள், ரசிகர்கள் என அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது.
12ம் வகுப்பு படிக்கும் குழந்தை இவ்வாறு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன அழுத்தத்தில் இருந்திருப்பது அனைவரையும் தீரா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 16 வயதுடைய விஜய் ஆண்டனியின் மகள் மீரா 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டாக மிகவும் சோர்வாக இருந்ததால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த சமயத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார் இதனை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் மீரா தற்கொலை செய்து கொண்டது உறுதியானது இதனை தொடர்ந்து மீராவின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் பிறகு டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முன்னணி நடிகர்கள், நடிகைகள் பலரும் விஜய் ஆண்டனி வீட்டிற்கு நேரில் சென்று அவரது மகள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் மீராவின் பள்ளி ஆசிரியர்கள், தோழிகள் அனைவருமே துயரத்துடன் கதறி அழுதுக் கொண்டே மீரா இப்படிப்பட்ட பெண் கிடையாது என்று பலவற்றையும் பகிர்ந்துக் கொண்டார்கள்.
இதனை அடுத்து திருப்பலிக் கூடத்தில் மீராவின் புகைப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பிரார்த்தனையில் விஜய் ஆண்டனி அவரது மனைவி கதறி அழுது கொண்டார்கள். அப்பொழுது பாத்திமா உன்னை கருவில் சுமந்ததை நினைத்து பெருமை அடைகிறேன், இந்த ஜென்மத்தில் பிரிந்தாலும் அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து வாழ்வோம் மகளே… என்ன பிரச்சினையாக இருந்தாலும் சொல்லி இருக்கலாமே என கதறி அழுதுள்ளார்.