விஜய் ஆண்டனியின் ‘கொலை’ பட ட்விட்டர் விமர்சனம்.! படம் எப்படி இருக்கிறது..

vijay antony
vijay antony

vijay antony; விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று கொலை திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி தொடர்ந்து சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கூறும் வகையில் இருக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது விடியும் முன் படத்தின் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியிருக்கும் கொலை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார் மேலும் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்திற்கு க்ரிஷ் இசையமைத்திருக்கிறார். திரில்லர் கதையம்சத்துடன் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில் உலகளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் ரிலீஸ்சாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தினை பார்த்து விட்டு தொடர்ந்து ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அதாவது, கொலை டல்லான படமாக இருக்கிறது படத்தை அணுகிய விதம் நல்லா இருக்கு, மெதுவாக கதை செல்வதும் ஓகே தான் ஆனால், அது கவரும் விதமாக இருந்திருக்கலாம். ஆச்சரியப்படுத்தும் காட்சிகள் ஒன்று கூட இல்லை. விஜய் ஆண்டனி படம் முழுக்க நிதானமாகவே உள்ளார். ரித்திகாவுக்கு நடிக்க ஒன்னும் இல்லை, பின்னணி இசை நன்றாக இருக்கிறது. 2,3 காட்சிகளை தவிர மற்ற காட்சிகளில் வி.எம்.எஸ் சுமார். மீனாட்சி நன்றாக நடத்துள்ளார். போரானது மர்டர் மிஸ்டரி படம் இது என பதிவேற்றுள்ளார்.

இவரை அடுத்து கொலை பிலோ ஆவரேஜ் திரில்லர் படம். நடிப்பு l, சில காட்சி அமைப்பும் அருமையாக உள்ளது. நிறைய காட்சிகள் டல்லடிக்கும் வகையில் உள்ளனர். ட்விஸ்ட்டுகள் அனைத்தும் கணிக்கும் படி உள்ளது படத்தில் நிறைய பிரச்சனைகள் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.