விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்து பல சூப்பரான பாடல்களை கொடுத்துள்ளார் அதேபோல நடிகராகவும் பல வெற்றி படங்களை கொடுத்து தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார். இருப்பினும் அண்மை காலமாக அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை..
அதனால் ரசிகர்கள் விஜய் ஆண்டனியின் புதிய படங்களை எதிர்நோக்கி இருக்கின்றன. ரசிகர்கள் எதிர்பார்ப்பது போலவே விஜய் ஆண்டனியும் வித்தியாசமான பல புதிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன், ரத்தம் மற்றும் பல படங்கள் இருக்கின்றன. குறிப்பாக பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி நடித்தும் வருகிறார்.
விஜய் ஆண்டனி இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது மறுபக்கம் இவர் நடித்துவரும் கொலை திரைப்படம் தற்போது இறுதி கட்ட ஷூட்டிங் நோக்கி நகர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தில் விஜய் ஆண்டனி உடன் கைகோர்த்து ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், முரளி ஷர்மா, அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து உள்ளனர்.
இந்த படம் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி உள்ளதாம். கொலை திரைப்படத்தை இன்ஃபினிட்டி பிலிம் வென்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் கொலை படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இந்த மோஷன் போஸ்டரை பார்க்கும் போது கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்கும் வகையில் இது இருந்து வந்துள்ளது இதனால் இந்த படம் சற்று வித்தியாசமாக இருக்கும் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள் விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் மோஷன் போஸ்டரை..