vijay antony : தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி இவர் நடிப்பில் பிச்சைக்காரன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் இன்னும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல் இசையமைப்பாளராக அங்காடித்தெரு, சுக்கிரன் திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார்.
ஆனால் நடிகனாக அண்ணாதுரை, திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன் பிச்சைக்காரன் 2 என சமீபத்தில் வெளியாகிய திரைப்படங்கள். இவருக்கு மீரா என்ற மகள் இருக்கிறார் சமீபத்தில் அதிகாலை 3 மணி அளவில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இவரின் இழப்பு ஈடுகட்ட முடியாத இழப்பாக இருந்து வருகிறது. விஜய் ஆண்டனியின் மகள் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இவரின் இழப்பால் வாயில் பச்சை தண்ணீர் கூட படாமல் விஜய் ஆண்டனி இருந்தார் அது மட்டும் இல்லாமல் மீராவின் உடல் வந்தவுடன் விஜய் ஆண்டனியின் மனைவி கதறி அடித்து அழுதார். மீராவின் இழப்பு சினிமா உலகினரை அதிர்ச்சி குள்ளாக்கியது ஏனென்றால் சமீப காலமாக பள்ளி படிக்கும் பெண்கள் இப்படி தற்கொலைக்கு ஈடுபடுவது அதிகரித்து வருகிறது இதனைப் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் தங்களுடைய பிள்ளைகளை அவ்வப்பொழுது கண்காணிக்க வேண்டும் அவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முதன்முறையாக தன்னுடைய மகள் இறந்த பிறகு ஒரு உருக்கமான அறிக்கையை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது .
அன்பு நெஞ்சங்களே என் மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள் அவள் இப்பொழுது இந்த உலகத்தை விட சிறந்த ஜாதி மதம், பணம் பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள் என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள் அவளுடன் நானும் இறந்து விட்டேன் நான் இப்பொழுது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன் அவள் பெயரில் நான் செய்ய போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள் இப்படிக்கு உங்கள் விஜய் ஆண்டனி என அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.