Vijay Antony : தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி. இவரது மகள் மீரா சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் பெரும் சோகத்தில் உள்ளாகியது.. குறிப்பாக இது விஜய் ஆண்டனிக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சோகம் ஆகும்..
சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் விஜய் ஆண்டனியை நேரில் சந்தித்தும் ஊடகங்கள் வாயிலாகவும் ஆறுதல் கூறி வந்தனர். மகளை இழந்து சோகத்தில் தவிக்கும் விஜய் ஆண்டனி சில தினங்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் ஒரு பதிவை போட்டு இருந்தார்.
அதில் என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள், அவள் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள், அவளுடன் நானும் இறந்து விட்டேன் அவளுக்காக இனி நான் நேரத்தை செலவிட இருக்கிறேன், அவள் பெயரில் நான் தொடங்க இருக்கும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே திறந்து வைப்பாள் என கூறியிருந்தார்..
மீரா இறப்பதற்கு முன்பு பட வேளைகளில் பிசியாக ஓடிக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி கொஞ்ச நாட்களாக வெளியில் எங்கும் வராமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.. இப்படியே வீட்டிலிருந்தால் மீராவைப் பற்றி யோசித்து யோசித்து மன அழுத்தம் அதிகமாகும் என்பதால் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வர விஜய் ஆண்டனி படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிவு செய்திருக்கிறாராம்.
ஒரு புது இயக்குனர் படத்தில் விஜய் ஆண்டனி கமிட்டாகி இருந்தார் அதன் ஷூட்டிங் தற்போது பெங்களூருவில் நடந்து கொண்டிருக்கின்றன.. அதில் இன்று முதல் விஜய் ஆண்டனி கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றன.